விரைவில் வெளியாகவுள்ள “ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன்”

 

ஒன்பிளஸ் நிறுவனத்தின் “ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன்” ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இத் தகவலை அந் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 நிகழ்விலேயே அந் நிறுவனம் இத் தகவலை தெரிவித்துள்ளது.

அத்தோடு புதிய லிமிட்டெட்ட எடிஷன் ஒன்பிளஸ் 5T போனின் டீசர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மாட் போன் அதன் வடிவமைப்பை தவிர மற்ற அம்சங்களில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அத்தோடு ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை மற்றும் விற்பனை சார்ந்த விடயங்களை அடுத்த வாரம் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 16-ம் திகதி “ஸ்டார் வார்ஸ் தி லாஸ்ட் ஜெடி” எனும் திரைப்படம் வெளியாக இருக்கும் வேளையில் திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரே ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

0
Shares