இறந்த குழந்தை உயிர் பெற்ற அதிசயம் 

 உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதாகக் கூறிய இரண்டு வைத்தியர்களை வேலை நீக்கம் செய்யுமாறு வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இச் சம்பவமானது டெல்லியில் மேக்ஸ் எனும் வைத்தியசாலையிலேயே நிகழ்ந்துள்ளதுஇங்கு கடந்த 30  ஆம் திகதி ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்க்கப்பட்டுள்ளார்.

அப் பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போகின்றது என கூறப்பட்ட நிலையில் ஒரு குழந்தை மட்டும் இறந்து பிறந்துள்ளது.பிறந்த மற்ற குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது.செயற்கை சுவாசம் வழங்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையும் இறந்து விட்டதாகக் கூறி ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந் நிலையில் பெற்றோர்கள் அக்குழந்தைக்கும்  இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்த வேளையில் உடல் அசைவதை பெற்றோர் கண்டுள்ளனர்.மேலும் உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதென தவறாக கூறிய அவ் வைத்தியசாலையின் நிர்வாகம்  மீது அப் பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.

0
Shares