இலங்கைக்கு கிடைக்கவுள்ள கெளரவம்

 

 

 

சமூகத்தில் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பிரித்தானிய மகாராணியால் இலங்கையர் ஒருவர் கௌரவித்து விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

பாக்யா விஜேவர்தன என்னும் இலங்கையரே இவ்வாறு கௌரவிக்கப்படவுள்ளார்.

18 முதல் 29 வயது வரையிலான இளம் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

பால் நிலை சமத்துவம்,உளவியல் ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியோர்,சிறுவர் உதவிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் மக்களின் வாழ்க்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு இவ்வாறு விருது வழங்கப்படவுள்ளது.

மேலும்,பொதுநலவாய நாடுகளின் 52 உறுப்பு நாடுகளிலிருந்து இந்த விருத்திற்கான தெரிவுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares


Latest Posts