உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி

உதய சூரியன் சின்னத்தில் புதிய அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.
இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை 2 மணியளவில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணி எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியனில் போட்டியிடவுள்ளதாக மன்னார் மாவட்ட பொதுஅமைப்புகளின் தலைவர் சிவகரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன், இந்த கூட்டணிக்கான பெயர் எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0
Shares