குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு ‘ரெட் கார்ட்’

 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி பதக்கம் வென்றது பலமுறை நிரூபிக்கப்பட்டது.அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள  குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அந் நாட்டிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த  குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்பட சமீபத்திய தடகள போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு அவர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

 
அதனையடுத்து, அடுத்த ஆண்டு  தென் கொரியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்  அந்த நாட்டு அணிக்கு தடை விதிக்க வேண்டுமென  பல நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.இந்நிலையில், இது குறித்து  முடிவுகளை எடுக்க  சுவீஸ்லாந்தின்  லாசன்னே நகரில் சர்வதேச ஒலிம்பிக் மன்றத்தின்  கூட்டம் நடைபெற்றுள்ளது.

அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் வீர,வீராங்கணைகள் ஊக்கமருந்து  பயன்படுத்தியது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக விவாதம் நடந்தது. இதன்கா ரணமாகவே  வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது.இருப்பினும், ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களும் கடும் சோதனைக்கு பின்னரே விளையாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0
Shares