தற்கொலை உணர்வை தூண்டும் ஸ்மார்ட்போன்கள் 

ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன் படுத்தும்  இளைஞர்களுக்கு தற்கொலை உணர்வு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.மேலும் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக அண்மைய ஆய்வு மூலம்  தெரியவந்துள்ளது.

 இடைவிடாது  ஸ்கிரீன்  உபயோகிப்பதால் மன சோர்வு அதிகரிக்கவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக  ஃபுளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தின் தாமஸ் ஜாய்னர் தெரிவித்துள்ளார்.
.
நாள் ஒன்றிற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாதனங்ளை பயன்படுத்துபவர்களில் 48 சதவிகிதத்தினர், தற்கொலை சார்ந்த பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
0
Shares