கார் விபத்தில் பலியான சாதனை நாயகன்

கேரள மாநிலம் கோட்டயம் திருவல்லா நகரைச் சேர்ந்த ஜேக்கபின் மகனான 25 வயதுடைய குரியன் ஜேக்கப் இந்தியா முழுவதும் காரில் சுற்றுப்பயணம் செய்து தேசிய விருது பெற்றவர்.

இந் நிலையில் இவர் நேற்று திருவல்லா எம்.ஜி. பாதையில் மோட்டார் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையில் பஸ் வண்டியொன்றுடன் மோதுண்டதில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதன்போது பாரிய காயங்களுக்கு உண்டான இவரை பக்கத்திலிருந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(HA)

0
Shares