கொதிக்கும் அசிட் குளம்

இயற்கை தாயின் அதிசயங்களுக்கு எல்லையே இல்லையென்று தான் கூற வேண்டும்.ஏனெனில் அவ்வாறான அதிசயங்களில் ஒன்று தான் அசிட் குளம்.

இந்த அசிட் குளமானது நியூயோர்க்கிலுள்ள பிரபல பூங்காவான yellow stone இல் அமையப் பெற்றுள்ளது.இந்த பூங்காவானது 15 சதவீதம் நீரால் சூழப்பட்டதாகும்.

அதுமட்டுமல்லாமல் இங்கு பணிகளால் சூழப்பட்ட காடுகளும் காணப்படுகின்றன.மேலும் ஜனவரி மாத காலத்தில் வெறும் 9 டிகிரி வெப்பநிலை மட்டுமே காணப்படுமாம்.

ஆனால் ஜூலை மாதத்தில் 80 டிகிரி வெப்பம் காணப்படுமாம்.ஆகவே இவ் அழகிய அதிசயத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு கழிப்பதற்காக மிக நீண்டதொரு இரும்புப் பாலமொன்று அமைக்கப்பட்டு உரிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் பல சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இக்குளத்தை எட்டிப் பார்க்கும் முயற்சியில் உயிரையும் இழந்துள்ளனர்.(HA)

 

0
Shares