‘சிறந்த நபர்’ விருது பெற்ற செல்பி குரங்கு

இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை இந்தோனேசியாவின் செல்பி எடுத்த ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ இனத்தைச் சேர்ந்த நருடோ எனும் குரங்கிற்கு விலங்குகள் உரிமை குழுமம் வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஒரு தீவுப் பகுதியில் பிரிட்டன் புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டர் குரங்குகளை புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்..

காட்டில் அவர் பொருத்தி வைத்திருந்த கேமராவில் உள்ள பட்டனை அங்கிருந்த ‘நருடோ’ என்ற குரங்கொன்று  அழுத்தியுள்ளது .அவ்வேளையில் அந்த குரங்கின் புகைப்படம் பதிவாகியுள்ளது. இது குரங்கு எடுத்த செல்பி என இணையதளங்களில் வைரலாக பரவியது.

இதற்கிடையே பீட்டா அமைப்பானது இந்த புகைப்படத்தின் காப்புரிமையை செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.

குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு, மனிதர் அல்லாத உயிரினத்தை, உரிமையாளராக அறிவிக்கக் கோரிய அந்த வழக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

இறுதியில் அந்த புகைப்படம் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை ‘கிரெஸ்டட் மேகாகஸ்’ குரங்கினத்தை பாதுகாக்க நன்கொடையாக அளிப்பதாக டேவிட் ஸ்லேட்டர் ஒப்புக் கொண்டார். இதனால் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.(HA)

0
Shares


Latest Posts