ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிறைவு செய்வதற்காக பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதிவிக் காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0
Shares


Latest Posts