புகையிரத பயணிகளே இது உங்களுக்கான அறிவித்தல்

புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நேற்று இரவு வேளைகளில் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறைவிடம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த புகையிரதங்கள் நிறைவிடம் சென்றதன் பின்னர் குறித்த புகையிரதங்களின் சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் இந்த போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0
Shares