அமெரிக்க பாரம்பரியத்தை மாற்றிய டிரம்ப்?

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாக இதனை கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அமெரிக்க நலனை கருத்தில் கொண்டும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையிலான அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

0
Shares