இந்தியாவை போட்டுக்கொடுத்த இலங்கை!

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை முறைப்பாடு செய்துள்ளது.

இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது காற்று மாசுபாடு காரணமாக, இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மேலும், முகமூடி அணிந்தவாறு இலங்கை வீரர்கள், களத்தடுப்பில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்பட்ட நிலையில், போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை முறைப்பாடு செய்துள்ளது.

0
Shares