யார் வேண்டுமானாலும் என்னிடம் கேள்வி கேட்கலாம் – லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல தனியார் தொலைக்காட்சியொன்று நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் லட்சுமி நாராயணன்.

அந் நிகழ்ச்சியின் 1500 ஆவது நாள் படப்பிடிப்பன்று அவர் கோபத்தோடு கலையகத்தை விட்டு வெளியேறுவது போன்ற காணொளியொன்று அண்மையில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் வெளியான ப்ரமோவில் கலையகத்துக்குள்ளே ஒருவர் வந்து லட்சுமி நாராயணனை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அவமானப்படுத்துவது போன்ற ஒரு காட்சி வெளியாகியுள்ளது.

இதற்கு லட்சுமி நாராயணன் “என்னிடம் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் . நான் அவர்களுக்கு பதில் கூற தயாராகவுள்ளேன்.இதற்கெல்லாம் நான் அசரப்போவதில்லையென” கருத்து தெரிவித்துள்ளார்.(HA)

0
Shares