மன்னிப்பு கேட்டது ஆப்பிள்

 

புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும், குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் பேட்டரிகளை மாற்றித் தருவதாகவும், 2018ல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களின் பேட்டரி திறனை அறிந்துக் கொள்ளும் வகையில் மென்பொருள் வசதி ஒன்றை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் அடைந்துள்ளவர்களின் கவலையை நீக்கவும் மற்றும் ஆப்பிள் மீதான அவர்களின்  நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

 

 

0
Shares