இம்மாதம் தோன்றவுள்ளது முழு சந்திரகிரகணம்

இம்மாதம் 31 ஆம் திகதி முழு சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழவுள்ள இந்த சந்திர கிரகணம் ”BLUE MOON” என்று அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரகிரகணம் ஏற்படும்போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும் இருளாகவும் தென்படும் எனவும் மொத்தமாக 77 நிமிடங்கள் இந்த சந்திரகிரகணம் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடலில் கொந்தளிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திரகிரணம் ஆனது அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் எனவும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோநேசியா, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் மாலை வேளையில் முழு நிறைவாக தெரியும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முதல் இந்த சந்திரகிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி தோன்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

 

0
Shares