ஒரு நாள் தூங்காமல் இருந்தால் இவை தான் விளைவுகள்

ஒரு ஆரோக்கியமான உடல் நிலையைப் பேண ஊட்டச்சத்து உணவுகள், உடற்பயிற்சி மற்றும் சரியான அளவு தூக்கம் என்பவை தேவை. தொடர்ச்சியான தூக்கமின்மை உங்கள் உடலில் டயபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

குறைந்த பட்சம் ஐந்து மணி நேர தூக்கம் அல்லது அதிகமான ஒன்பது மணி நேர தூக்கம் உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவை இதய நோய்கள் மற்றும் குறைந்த தூக்கத்தால் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.

மேலும் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது.

அத்தோடு உங்கள் நினைவாற்றல் திறனை பாதிப்படையச் செய்கிறது. உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு , சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

0
Shares