அவுஸ்ரேலியாவில் மண்ணை கவ்வியது இங்கிலாந்து

அவுஸ்ரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை நான்குக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் அவுஸ்ரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி 7 விக்கட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இங்கிலாந்து அணி 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்காரணமாக அவுஸ்ரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிமன்ஸ் தெரிவான அதேவேளை, தொடரின் நாயகனாக ஸ்ரீவ் ஸ்மீத் தெரிவானார்.

0
Shares