merry christmas

happy

மக்களே! உங்களுக்கு ஆப்பு ரெடி

Facebook இல் போலியான கணக்கை இனி ஆரம்பிக்க முடியாத அளவிற்கு தற்போது ஒரு புது தெரிவொன்றை Facebook நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு Facebook கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை இருந்தால் மட்டும் போதுமானது என்ற நிலை இருந்தது.

இதன் காரணமாக பெரும்பாலான நபர்கள் போலியான Facebook கணக்குகளை ஆரம்பித்துக் கொண்டே இருந்தனர்.அதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தினர்.

விளங்கக் கூறின் , வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து ஆண் நபர் ஒருவர் பல பெண்களுடன் நட்பாக பழகி , பல குற்ற சம்பவங்கள் முதல் தீவிரவாதம் வரை அனைத்திற்கும் வழி வகுக்க இந்த Facebook காரணமாக இருந்தது.

இதனாலேயே போலி கணக்குகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை Facebook நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது ஒரு கணக்கை ஆரம்பிக்கும் போது போலியான வேறொரு புகை படத்தை Upload செய்தால் அது தானாகவே Tag செய்து காட்டும் விடும்.

அந்த புகைப்படம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் பட்சத்தில் அந்த புகைப்படம் யாருடையது மற்றும் அந்த புகைப்படத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை மிக எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

அவ்வாறு மற்றொருவரின் புகைப்படத்தை,அவர்கள் அனுமதி இன்றி தவறான செயல்களுக்காகவும்,போலி கணக்கை ஆரம்பிக்கவும் பயன்படுத்தினால்,உரிய நபருக்கு அந்த புகைப்படம் குறித்த விபரம் தெரிய வந்து விடும்.

பின்னர் அந்த போலிக் கணக்கை Report செய்தால் உடனடியாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
Shares