இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் இவர்தான்

இலங்கை கிரிக்கட் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான அணித்தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கட் சபை சற்றுமுன்னர் இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான முக்கோண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.இந்த தொடர் பங்களாதேஷில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் செயற்படவுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் பதவிக்கு டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமாலின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares