Facebook பாவனையாளர்களே சற்று எச்சரிக்கையாக இருங்கள்

தங்களது முகநூலில் உள்ள நண்பர்களே உங்களுடைய Inbox இற்கு Private Video இணைப்புக்களை அண்மைக்காலமாக அனுப்பப்பட்டு வருகிறதா ?

அவ்வாறாயின் அந்த வீடியோ இணைப்பு நீங்கள் பதிவேற்றிய படம் போலவே தங்களின் முகப்புப் படமும் அதற்குக் கீழே Private Video என்றும் இருக்கும் .

தயவு செய்து அந்த வீடியோவை பார்க்க முயற்சிக்காதீர்கள். Message box இல் உள்ள Setting (விருப்பத்தேர்வுகள் ) பகுதிக்குச் சென்று Clear Window எனக் கொடுததுவிடுங்கள்.

அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என அறிய முற்பட்டால் தங்கள் காலக்கோட்டில் Timeline இல் அந்த ஆபாச வீடியோ தானாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.

நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டேக் செய்கிறார்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை ஹேக் ப்ரோகிராம் எனும் செயற்பாட்டைக் கொண்டு நடத்துகிறார்கள்.

(இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)

இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!

முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.

Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.

Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when anyone logs into your account from a new device or browser -> அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.மிகவும் அவதானமாக இருங்கள்.

 

0
Shares