இப்படியும் ஒரு கொடூர தாய் பாருங்க மக்களே

அர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது மூன்று வயது மகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான இந்த பெண் தனது, மூத்த மகளை கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயதேயான இந்த குழந்தை டேப் (Tablet ) வைத்து விளையாடிவிட்டு அதனை கவனக்குறைவாக எங்கேயோ வைத்துவிட்டதால் அந்த பெண் குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார் தாய்.

மேலும், டேப் கிடைக்கவில்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறி குழந்தையின் முடியை பிடித்து தூக்கி அடித்தும் எட்டி உதைத்தும் கொடுமை படுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், அந்த பெண்ணை கைது செய்யகோரி கண்டனங்கள் பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

0
Shares