இதோ உங்கள் தொழில் எதிரி இந்த வங்கியில் தான் கணக்கு வைத்துள்ளார்

ரூபாய் 500 கொடுத்தால் ஆதார் அட்டை விபரங்களைக் கூவிக் கூவி விற்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று அதிர்ச்சி தகவலொன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியைக் கேட்ட பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இவ் விடயம் சாத்தியமில்லை எனவும் ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒருவரின் ஆதார் எண் தெரிந்திருந்தால் அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றார் என்பதை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது எந்த ஒரு மொபைல் எண்ணில் இருந்தும் *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்து ஏதாவது ஒரு ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், அந்த ஆதார் எண்ணுக்குரிய நபர் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்ற விபரம் தெளிவாக வருமாம்.

இதனால் தொழில் செய்பவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் உருவாக அதிக வாய்ப்புள்ளதால் தற்போது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ளனர்.

 

0
Shares