கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

கொழும்பில் மருதானை ஆசிரி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள வீதியொன்றில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சிதைந்துள்ளது .

இந்த திடீர் விபத்திற்கான சரியான காரணம் என்னவென்பது பற்றி இன்னும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தீப் பற்றியெறிந்த முச்சக்கர வண்டிக்கு அருகிலிருந்த அனைத்து வாகனங்களையும் அங்கிருந்து அகற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

0
Shares