ஐஸ் திருவிழாவில் திருமணம்

சீனாவில் ஐஸ் திருவிழாவின் ஒருபகுதியாக தங்கள் வாழ்க்கை துணையை கரம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீனாவில் குளிர்காலம் ஆரம்பித்தவுடன் கொண்டாடப்படும் முதல் நிகழ்ச்சி ஐஸ் திருவிழாவாகும். இந்த திருவிழாவில் திருமணம் செய்து கொள்வது பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

திருமண ஆடைகளுக்கு மேல் குளிருக்கு இதமாக கம்பளிகள் அணிந்து தம்பதிகள் அணிவகுத்தனர்.

இது பற்றி பேசிய விழாவில் பங்கேற்ற மணமக்கள், பனிப்பகுதியில் திருமணம் செய்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது பலரது குழந்தை பருவ கனவாக உள்ளதாக தெரிவித்தனர்.

மேற்கண்ட கனவை நிறைவேற்ற தமது கணவர் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக மணப்பெண் ஒருவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய ஷூவோயிலு என்ற மணப்பெண் தங்களது காதல் போலவே இந்த பனியும் தூய்மையானது என்றார். இது மிகவும் அருமையான தருணம் என மகிழ்ச்சி தெரிவித்த அவர், தங்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பம் எனவும் கூறியுள்ளார்.அத்தோடு ஒருவருக்கொருவர் நேசித்து மகிழ்வுடன் இருப்போம் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares