கர்ணன் படத்தில் விக்ரம் நடிக்க இதுதான் காரணமாம்

300 கோடி ருபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் மஹாவீர் கர்ணா. இப்படத்தில் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறியுள்ளார்.

கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்த படத்தை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும் என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் தான் கர்ணன் பற்றி 3 வருடமாக செய்த ஆராய்ச்சி பற்றி தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் விக்ரம் உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

0
Shares