டிராவிட் அப்படியென்ன மிஸ் பண்ணுகிறாராம்?

இன்றைய தினம் தனது  பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்   ஈடற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ஜொலித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் ராகுல் டிராவிட் 30 ஆண்டுகள் கழித்தும் அவர் மிகவும்  மிஸ் செய்யும் ஒரு உலகக் கிண்ணத் தொடர் இருக்கிறதாமென கூறியுள்ளார்.

டிராவிட் தற்போது Under -19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்நிலையில் வருகின்ற 13-ம் திகதி நியூஸிலாந்தில் Under -19 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாக உள்ளது.

ஆகவே இத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு சில இந்தியச் சிறுவர்களுக்கு மும்முரமான பயிற்சி வழங்கி வருகிறார் டிராவிட்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டிராவிட் தனக்கு இப்படி Under -19 உலகக் கிண்ணம் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை என்பது குறித்து வருந்தியுள்ளார்.

 

0
Shares