தைப்பொங்களை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

எதிர்வரும் தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 16 ஆம் திகதிவரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அதிகாரி சரத் வல்கம்பாயே கூறியுள்ளார்.

அந்தவகையில் 83 மேலதிக பஸ்கள் கொழும்பிலிருந்து வௌி மாவட்டங்களுக்கு இன்று செல்லவுள்ளன.

இதேவேளை, நாளைய தினம் 156 பஸ்களும், சனிக்கிழமை 124 பஸ்களும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேபோன்று தைப்பொங்களின் பின்னர் கொழும்பு நோக்கி வருவதற்கான விசேட பஸ்சேவைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

0
Shares