merry christmas

happy

ரசிகர்களோடு சூர்யா குத்தாட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில்,அனிருத்தின் இசையில் நாளைய தினம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

அனிருத்தின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் ‘சொடக்கு மேல…’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் ப்ரோமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம்.

ஆகவே இம் முறையும் அங்கு சென்று ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

அதன் பின் ரசிகர்கள் மத்தியில் சூர்யா ஆடிய வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக்கியுள்ளனர்.

.@Suriya_offl‘s Shows Of His Mass In Kerala, Dances To #Sodakku Song !!

0
Shares