merry christmas

happy

53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதான தனிமையிலிருந்த தனது விதவை தாய் கீதா அகர்வால் என்பவருக்கு அவருடைய மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்த சம்பவம் வியக்க வைத்துள்ளது..

கீதா அகர்வாலின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்து போயுள்ளார்.அத்தோடு கீதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார்.

இதனால் தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார் மகள்.இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்த கீதாவையும் ஒரு வழியாக அவர் சம்மதிக்க வைத்து விட்டார்.

பின்னர் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர் கீதாவின் மகளின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த மகள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

தற்பொழுது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தின் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக அவரின் மகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

 

 

0
Shares