2021 வரை ­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடியும் – சட்டமா அதிபர்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பதவியேற்ற நாள் முதல் ஆறு வரு­டங்கள் 2021 வரை அவர் ­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடியும் என சட்டமா அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார்.

தன்­னால்­ ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ள நிலையில், அது குறித்து ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது.

பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் இன்று உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில்சட்டமா அதிபர் மேற்படி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இன்­றைய தினம் திறந்த நீதி­மன்றில் இந்த விவ­காரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், வாதப் பிர­தி­வா­தங்­களை ஆராய்ந்து தீர்­மா­னிக்க, பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தம நீதி­யரசர் இந்த குழுவை நிய­மித்­துள்ளார்.

அந்­த­ வ­கை­யி­லேயே 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகள் பிரகாரம் 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா ? அல்லது தானும் 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை அவர் கோரியுள்ளார். இன்று இந்த விவகாரம் விசார ணைக்கு வருகின்றது.

0
Shares