நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன தான் முடிவெடுத்துருக்காங்க ??????

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உள்ளதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை அதுபற்றி பேசவே இல்லை.

அவ்வப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாக பரவும். ஆனால் இருவரும் தங்கள் காதல் குறித்து இதுவரை ஊடகத்தில் பேசவே இல்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விக்னேஷ் சிவனை வைத்துக்கொண்டு அதற்கான பதிலை கூறியுள்ளார்.

மேலும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை தொகுப்பாளர்கள் தொகுத்தனர்.

குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம்? யாருடன் திருமணம்? பிடித்த நடிகை யார்? என பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் நேரடியாக பதில் சொல்லாமல் வெகு நேரமாக சமாளித்தார்.

ஆனாலும் தொடர்ந்தும் தொகுப்பாளர்கள் கேள்விகளை கேட்க அந்த கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இசைமைப்பாளர் அனிருத், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில் நயன்தாராதான், போதுமா என்றார் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய உள்ளதை அனிருத் உறுதி செய்ததும் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.இந்த செய்து எந்தளவு உண்மையோ ?????????

 

0
Shares