2 நாட்களாக அறையில் கதறிய 3 வயது குழந்தை

தாய்வான் நாட்டின் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய தாத்தா, பாட்டி இருவரும் உயிரிழந்தது கூட தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்தும் வீட்டின் அறையின் உள்ளே இருந்து அச்சமடைந்துள்ளார்.

இவர்கள் அங்கு ஒரு சிறிய அளவிலான உணவுக் கடை வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டில் இருந்த கதவும் மூடப்பட்டே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அயலவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவ் வேளையில் பொலிசார் உடனடியாக வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அவர்களின் அன்புக்குரிய பேரன் இடைவிடாது தாத்தா, பாட்டி என்று அழுது கொண்டே இருந்துள்ளான்.

உள்ளே சென்று பொலிசார் பார்த்த வேளையில் , அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். அதில் தாத்தா வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.

0
Shares