ரவி கருணாநாயக்க கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக் மாரப்பன தலைமையிலான குழு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

கட்சி செயற்பாடுகளில் இருந்து ரவி கருணாநாயக்க விலக வேண்டும்
என, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அவர் கட்சியின் உப தலைவராக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

 

 

0
Shares