கற்றாழை ஜெல்லில் இருக்கும் மருத்துவ பயன்கள்

பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது எல்லோரும் அறிந்த ஒரு விடயம்.

அதிலிருந்து கிடைக்கும் திரவ வடிவிலான ஜெல் சூரிய ஒளியுடன் கலந்து வரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.அது மட்டுமில்லாமல் கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகம் பொலிவடையும்.

உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் இதில் உள்ளது.உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது.மலச்சிக்கல்,வாய்வுத் தொல்லை,வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.

0
Shares