டி.இமான் இசையில் அஜித்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் தான் விஸ்வாசம்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. பின்னர் அனிருத் இசையமைப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி டி.இமான் இசையமைக்க போவதாகவும் அதற்க்கான ஆரம்பகட்ட வேலைகளை இமான் ஆரம்பித்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது

0
Shares