தமிழ் திரைப்பட உலகமே தற்போது நெருக்கடியில்

டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. திருட்டு வி.சி.டி.யும் சினிமாவை வதைத்துக் கொடு இருக்கின்றது.

புதிய திரைப் படங்களை திரையரங்குகளில் திரையிடும் நாளிலேயே இணையதளங்களில் வெளியிடும் நவீன தொழில் நுட்ப திருட்டுகளும் பெருகி உள்ளன.

இதனால் மார்ச் முதலாம் திகதி முதல் கியூப் கட்டணத்தை குறைக்காத டிஜிட்டல் சேவை வழங்கும் அமைப்பை கண்டித்து புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தும் முகமாக ‘ஸ்ட்ரைக்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரைப் பட உலகினர் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் சேவைகளை வழங்கும் அமைப்புகள் பட அதிபர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா?என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம்.. காலவரையற்ற வேலை நிறுத்தம் என்பதால் எத்தனை நாள் இந்த போராட்டம் நீடிக்கும்? என்றும் குழப்பம் எழுந்துள்ளது.

இதனால் அடுத்த மாதம் திரைக்கு வரவிருந்த பல புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். விஷால் நடித்த இரும்புத்திரை, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ராந்த், மிஷ்கின் இணைந்து நடித்துள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கரு, விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி உள்ளிட்ட பல படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

0
Shares