காதலர் தினம் ஸ்பெஷலாக வெளிவருகிறது சிகப்பு நிறத்தில் விவோ வி7 ப்ள்ஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்களை கவரும் விதமாக ரெட் நிறத்தில் வெளிவருகிறது விவோ நிறுவனத்தின் வி7 ப்ளஸ் மாடல்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் காதலர்கள் பெரும்பாலும் சிகப்பு நிறத்தில் உள்ள பூக்கள், அல்லது பொருட்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

காதலர் தினத்தின் இந்த ரெட் நிற உணர்வு தொழில் நுடபத்தையும் விட்டு வைக்க வில்லை. விவோ நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி வரும் விவோ வி 7 ப்ளஸ் ஸ்மார்ட் போன் காதலர் தினத்தை முன்னிட்டு கண்களை கவரும் மெட்டாலிக் ரெட் நிறத்தில் வெளியாக உள்ளது.

மேலும் காதலின் குறியீடான இதய வடிவத்தை தங்க நிறத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் விலை  இந்திய மதிப்பு ரூ. 22,990 என்றும், இந்த மொபைலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் இது விற்பனை செய்யப்படுகிறது.

24 எம்பி மெகா பிக்சல் கேமரா, 18:9 அஸ்பட் ரேட்ஷியோ, 5.99 ஹெச்டி டிஸ்ப்ளே, 1440×720 பிக்சல், ஸ்னேப்ட்ராகன் 450 சிப்செட், 3225 மெகா பேட்டரி கொண்ட இந்த விவோ வி7 ப்ள்ஸ் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஸ்பேஸ் கொண்டது.

0
Shares