குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018

தென் கொரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

தென்கொரியாவின் பியாசங் நகரில் இன்று தொடக்கம் 25 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் பனிச்சறுக்கல், ஸ்கேட்டிங், ஐஸ் ஹொக்கி உள்ளிட்ட 15 வகையான விளையாட்டுக்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 90 நாடுகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0
Shares