பிப்ரவரி 14ம் தேதி அறிமுகமாகும் ரெட்மி நோட்-5

செல்போன் தயாரிப்பின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஜியோமி, அதன் புதிய படைப்பான ரெட்மி நோட்- 5 கைப்பேசியை பிப்ரவரி 14ம் தேதி, தனது பிரத்யேகமான இணையதளமான Mi.com இல் வெளியிடும் என்று தகவல் அளித்துள்ளது.

2017ம் ஆண்டு அதிகம் விற்பனையான கைப்பேசிகளின் பட்டியலில் ரெட்மி நோட் 4 முதலிடம் பெற்று சாதனை படைத்த நிலையில், அதே நிறுவனம் அறிமுகப்படுத்தவிருக்கும் ரெட்மி நோட் 5 கைப்பேசிக்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ரெட்மி நோட்-4 கைப்பேசியில் இருந்த வசதிகளை காட்டிலும் பல புதிய வசதிகளுடன் ரெட்மி நோட்-5 வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைப்பேசியானது 5.99 அங்குலம் அளவுள்ள திரையுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட்மி-5 ஸ்மார்ட் போனானது 3GB/4GB RAM வசதி கொண்டதாகவும் 32/42GB சேமிப்பு திறன் வசதி கொண்டதாகவும் தாயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 16 மெகா பிக்ஸல் கேமராவுடனும், 5 மெகா பிக்ஸல் முன் கேமராவுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட்-5யின் பேட்டரி திறன் 4100mAh என்றும் கூறப்படுகிறது. வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கும் இதன் விலை இந்திய மதிப்பு ரூ.15,400 ஆகும்.

கடந்த வருடம் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா முன்னிலையில், ரெட்மி நோட் 4 கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஆண்டும் ஏதாவது விளையாட்டு பிரபலமோ அல்லது சினிமா பிரபலமோ அறிமுகபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
Shares