நேர்த்தியான காய்நகர்தல்! ஏமாற்றிய அரசியல் நகர்வு!!!

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்களுடன் வெளிவருவதால் கொழும்பு அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

அரசியல் ரீதியாக பின் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஆதரவளிக்கும் தாமரை சின்னத்தில் முதன்முறையாக தேர்தல் ஒன்றை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

மஹிந்த ஆதரவளிக்கும் கட்சி முன்னிலை வகிக்கும் அதேவேளை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரிய பின்னடைவை சந்தித்து மூன்றாமிடத்தில் உள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாரிய வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன..

மஹிந்த மற்றும் ரணிலின் இரகசிய நட்பு உடன்படிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிதறச் செய்து பலவீனப்படுத்தும் ரணிலின் காய்நகர்த்தல்களே பிரதான காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

 

 

 

 

 

 

0
Shares