வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை செஞ்சூரியனில் இடம்பெறவுள்ளது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் மோதும் 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இடம்பெறுகிறது.

நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க இந்தியா அணி ஆர்வமாக உள்ளது.

இருந்த போதிலும் சொந்த மண்ணில் தொடரை இழந்ததால் தென்ஆப்பிரிக்கா கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் கடைசி போட்டியில் வெற்றி பெரும் ஆர்வத்தோடு களமிறங்கவுள்ளது.

ஆனால் இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வரும் தென்னாபிரிக்க வீரர்களில் அம்லாவை தவிர வேறு எந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை இருந்த போதிலும் நாளைய போட்டியில் தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டம் அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

0
Shares