முதல் போட்டியில் அபார வெற்றி அடுத்த கட்டத்தை நோக்கி இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட முதல் T20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துதிப்படுத்தாட களமிறங்கிய பங்களாதேஸ் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த இலக்கானது பங்களாதேஷ் அணியால் சர்வதேச T-20 போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 194 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்படுத்தாட களமிறங்கிய இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

 

0
Shares