சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமானம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

இவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக சத்தியப்பிரமானம் செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று காலை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

0
Shares