இந்திய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 140 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

0
Shares