இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இனவாதத்தைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதற்காக இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

0
Shares