காஜல் அகர்வால் மனதில் காதலா?

நடிகை காஜல் தனெக்கென ஒரு அடையாளத்தையும்,திறமையையும் கொண்டவர்.தற்போது இவருக்கு 32 வயதாகும். காஜலுக்கு கூடிய விரைவில் திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் தற்போது இவர் பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்திலும், எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார்.

இது ஒரு புறமிருக்க இவர் வெளியில் செல்லும் போதெல்லாம் திருமணம் எப்போது என்று சிலர் கேட்டபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நான் எங்கு சென்றாலும் உங்களுக்கு எப்போது திருமணம்? யாரையாவது விரும்புகிறீர்களா? என்று தான் என்னிடம் கேட்கிறார்கள்.

என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். நானும் காதலை உணர்ந்து இருக்கிறேன். இரண்டு பேர் மீது காதல் ஏற்பட்டும் இருக்கிறது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் அந்த உணர்வு ஏற்பட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நடிக்க வருவதற்கு முன்னால் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்த பிறகு காதலிப்பது கஷ்டம். அதற்கு நேரம் கிடைக்காது. காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாவிட்டால் காதலித்து என்ன பிரயோஜனம்.

எனக்கு காதலிக்க நேரம் இல்லை. திருமணத்துக்கும் தயாராக இல்லை. இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்துபோய் இருக்கிறார்கள்.

அவர்களுடன் ஒரு எல்லைக்குள்தான் எனது பழக்கம் இருந்தது. அந்த எல்லையை தாண்டியது இல்லை. ஒரு சிலரை தவிர மற்ற நடிகர்களுடன் நட்பாகவும் பழகியது இல்லை.

சினிமாவில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வருகிறது. இரசனையும் மாறுகிறது. அதற்கேற்ப என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கதாபாத்திரங்களையும் புதிது புதிதாக தேர்வு செய்கிறேன். இதற்காக நிறைய படங்களை பார்க்கிறேன். வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன். ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் இருக்க ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.”

என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

0
Shares