இலங்கை தொடர்பில் முக்கிய அறிக்கை

நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான முக்கிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ராட் ஹுசைனினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொறுப்புக் கூறல் தொடர்பில் 30ஃ1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கி ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையிலே இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் அறிக்கையில் உள்ள விடயங்களுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநி ரவிநாத்த ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளக் குறிப்பிடத்தக்கது.

 

0
Shares