ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சுமார் 5 ஆயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இதன்போது இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

இம்மாத நடுப்பகுதியில் மூன்று கட்டங்களாக இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

 

0
Shares