சவுதியில் இலங்கை பணிப்பெண் சுட்டுக்கொலை

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்தே இவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட சவுதி பிரஜை ஒருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42 வயதான இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0
Shares